மனைவியை விவாகரத்து செய்தார் ஹர்திக் பாண்ட்யா.. இன்ஸ்டாவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Published:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’4 ஆண்டுகள் நாங்கள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும் என் மனைவி நடாஷாவும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் பிரிவது தான் தற்போதைய நிலைக்கு நல்லது என்று முடிவு செய்ததை அடுத்து பரஸ்பர மரியாதை மற்றும் நட்புடன் நாங்கள் எடுத்த கடினமான முடிவுதான் விவாகரத்து என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எங்கள் மகன் அகஸ்தியா இருவரது வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார் என்றும் ஒரு பெற்றோராக அவருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் வழங்குவோம் என்று உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் உங்கள் அனைவரின் ஆதரவு வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

hardik

ஹர்திக் பாண்டியாவின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர் பாண்ட்யா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடாஷா என்பவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்த நிலையில் ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக ஹர்திக் – நடாஷா தம்பதியினர் அறிவித்தனர் என்பதும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த பிரம்மாண்டமான திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திருமணம் ஆன நான்கே ஆண்டுகளில் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவியை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் மனைவி நடாஷா ஒரு நடன கலைஞர் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...