புதிய உணவகம் தொடங்கிய சுரேஷ் ரெய்னா? எங்கு தெரியுமா?

By Velmurugan

Published:

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ரெய்னா தனது பெயரில் நெதர்லாந் நாட்டு இந்திய உணவகம் திறந்து இருப்பதை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 1988 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற நான்கு சீசன்களிலும் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு மிகப்பெரியது.

இதுவரை மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 5528 ரன்களை குவித்துள்ளார். முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல் தொடர்களிலும் சரியாக விளையாடவில்லை.

இதனால் ஐபிஎல் தொடரில் அவரை எடுத்து எந்த அணியும் முன் வரவில்லை.இந்நிலையில் சுரேஷ் ரெய்னா நெதர்லாந் தலைநகரில் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். வட இந்தியா மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் ரெய்னாவின் உணவகத்தில் பரிமாறப்படுகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்-இல் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உணவு மற்றும் சமையலில் தனக்குள்ள ஆர்வம் மற்றும் உணவின் மீதான பிரியத்தை நீங்கள் அறிவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஏற்கனவே உணவகம் நடத்தும் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், விராட் கோலி, ஜடேஜா ஆகியோரது வரிசையில் ரெய்னாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.