தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘தி கேரளா ஸ்டோரி வழக்கில் நீதிபதி கேள்வி..!

Published:

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்டால் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அளிக்காமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் கேரளாவில் உள்ள மதமாற்றம் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் கேரளாவில் கூட இந்த படம் தடை செய்யப்படவில்லை என்பதும் அனைத்து திரையரங்களிலும் ஓடிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்த திரைப்படத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் திரையரங்குகள் இந்த படத்தை திரையிடக்கூடாது என மறைமுகமாக மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்களே முன் வந்து தாங்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடவில்லை என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்திலும் இந்த படம் தடை செய்யப்பட்டது. இது குறித்து கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது மேற்குவங்க மாநிலத்தில் எதனால் தடை செய்யப்பட்டது என நீதிபதி கேள்வி எழுப்ப இந்த படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக தடை செய்யப்பட்டது என மேற்குவங்க மாநில வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை அடுத்து தமிழகத்திலும் இந்த படம் ஏன் திரையிடப்படவில்லை? திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி இதற்கு பதிலளிக்குமாறு இரு அரசுகளுக்கும் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்த படம் வெற்றி தரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் சுமார் 70 கோடி ரூபாய் உலகம் முழுவதும் இந்த படம் ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...