சவுதியின் திடீர் அறிவிப்பு! உயரும் பெட்ரோல்,டீசல் விலை !

Published:

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 லட்சம் பேரல்கள் அளவுக்கு குறைக்க போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல், எரிவாயு, ரசாயனங்கள், உரங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பொருட்கள் கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகின்றனர். இந்தியாவின் கச்சா எண்ணெ தேவையில் 87 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

சவுதிஅரேபியா ,ஈரான் ,குவைத் போன்ற 23 கூட்டமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்திகள் 40 சதவீதத்தையும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளில் 60% பங்களிப்பையும் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா ஒரு நாளைக்கு தற்போது ஒரு கோடி பேரல்கள் அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

கடந்த ஆண்டில் உக்ரைன் போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை 123 டாலர் வரை அதிகரித்தது. இதனால் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விலைவாசி வெகுவாக அதிகரித்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் நுகர்வு சரிந்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து தற்போது 77 டாலராக சரிந்துள்ளது. விலையை மீண்டும் அதிகரிக்க செய்ய கடந்த அக்டோபரில் தினசரி உற்பத்தியை 20 லட்சம் பேரல்கள் அளவுக்கு குறைத்தனர்கள்.

ரஷ்யா 7 லட்சம் பேரல் அளவுக்கு குறைத்தது .ஆனாலும் கச்சா எண்ணெய் விலை சரிவை இதன் மூலம் தடுக்க முடியவில்லை தற்போது நாடுகளின் தினசரி உற்பத்தி நான்கு கோடி பேரல்கள் உள்ளது. சமீபத்தில் நடந்த ஆலோசனையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மாற்றம் எதுவும் செய்யாமல் தொடர முடிவு செய்யப்பட்டது.

தீவிர புயலாக வலுவடைந்தத பிபார் ஜாய் புயல்! திடீர் எச்சரிக்கை..!

ஆனால் சவுதி அரேபியா தன்னிச்சையாக தினசரி உற்பத்தியை 10 லட்சம் பேரல்கள் அளவுக்கு ஜூன் 1 முதல் குறைக்க போவதாக அறிவித்துள்ளது . இதனால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒரு டாலர் அதிகரித்து 77.49 டாலராக உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...