ஸ்கூல் பீஸ் கட்டலைன்னா இப்படியா பண்ணுவாங்க.. பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ..

By John A

Published:

நாடெங்கிலும் பெரும்பாலான மாணவர்களின் கல்வி அரசுப் பள்ளிகளையே சார்ந்திருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுப்பது சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தான். இவை இரண்டும் சரியாக இருந்தாலே ஒரு நாட்டின் வளர்ச்சி மளமளவென உயர்ந்து கொண்டே போகும். இந்தியாவில் சுமார் 150 கோடி மக்கள் தொகையில் 6 முதல் 25 வயதிற்குள் 30% பேர் கல்வி கற்கும் பருவத்தில் உள்ளனர். இவர்களின் பெரும்பாலோனார் பயில்வது அரசுப் பள்ளிகள்.

என்னதான் அரசுப் பள்ளிகள் திறமையான மாணவர்களை உருவாக்கினாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பயில்வதை விரும்புகின்றனர். ஏனெனில் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கற்றல் முறை போன்றவை அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தரமானதாக இருக்கும் என நம்புவதே இதற்குக் காரணம். ஆனால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தான் விண்ணை முட்டுகிறது.

சாதாரண எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கே லட்சங்களில் கட்டணம் கட்டி பிள்ளைகளைச் சேர்த்து விடுகின்றனர். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு பின்னர் கட்டணம் கட்ட முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் மாணவர்களை பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் கட்டவில்லை என அவர்களை சில இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.

மகனின் ஆசையை நிறைவேற்றி நடிகர் நெப்போலியன் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்..

அப்படித்தன் உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை அவமதித்துள்ளது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்களில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு வெளியே நிற்க வைத்து அவர்களை வீடியோ எடுத்து ஒவ்வொரு பெற்றோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்விக் கட்டணம் செலுத்தாமல் தங்கள் குழந்தைகள் பள்ளி வெளியில் கூனிக் குறுகி அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. தகவல் அறிந்த கல்வித்துறையும், காவல் துறையும் அப்பள்ளி மேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கொடூர செயலைச் செய்ததற்காக பள்ளி முதல்வர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். மேலும் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.