வீட்டுப்பாடம் எழுத ChatGPTஐ பயன்படுத்திய 7ஆம் வகுப்பு மாணவன்.. என்ன ஆகும் எதிர்காலம்..?

Published:

ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டு பாடம் எழுத ChatGPTஐ பயன்படுத்தி ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் ChatGPTஐ மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல புத்திசாலிகளின் வேலைகள் பறிபோகி வருகின்றன என்பதும் வருங்காலத்தில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வளர்ந்து வரும் டெக்னாலஜியை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் சேர்ந்த பள்ளி மாணவன் தனது ஏழாம் வகுப்பு வீட்டு பாடத்தை ChatGPT உதவியால் எழுதி அதை ஆசிரியரிடம் காண்பித்த போது ஆசிரியரிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில் உள்ள ஒரு குறிப்புகளை நான் அந்த மாணவன் நீக்காமல் அப்படியே பதிவு செய்ததை எடுத்து ஆசிரியர் அதனை கண்டுபிடித்துவிட்டார். இது மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆசிரியர்களின் கவலையை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் மூளையை மழுங்க செய்யும் டெக்னாலஜி தான்ChatGPT என்றும் சொந்தமாக கட்டுரை எழுதும் திறன் இந்த தொழில்நுட்பத்தால் இல்லாமல் போய்விடும் என்றும் ஆசிரியர்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். ChatGPT என்பது ஒரு நல்ல டெக்னாலஜி தான் என்றாலும் அதை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் அதை பயன்படுத்தினால் அவர்களது எதிர்காலம் அறிவுத்திறன் ஆகியவை கேள்விக்குறியாக மாறிவிடும் என்றும் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மாணவனின் உறவினர் வருவார் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் இந்த பதிவை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு கருவிகளை அதிகமாக சார்ந்து இருப்பது மூளையை துருப்பிடித்து காலப்போக்கில் அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று பல பயனர்கள் தங்களது கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...