Spotify மியூசிக் அப்ளிகேஷனை இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்காக, அப்போது புதிய அப்டேட்கள் இதில் கிடைத்து வருகிறது. இந்த அப்டேட்கள் இசை ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு வசதி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, Spotify மியூசிக் அப்ளிகேஷனில் ஏஐ மூலம் ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் Prompt மூலம் நாமே ஒரு Playlist உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக, நமக்கு டிராவல் சம்பந்தப்பட்ட பாடல்களை பிடிக்கும் என்றால், அதை Playlist ஆக உருவாக்கினால், டிராவல் சம்பந்தமான பாடல்களை ஏஐ எடுத்து கொடுக்கிறது.
அதே போல், ரொமான்ஸ், சோகம், மெல்லிசை என எந்த Playlist வேண்டுமானாலும், நாம் உருவாக்கினால், நாம் உருவாக்கிய Playlistக்கு ஏற்ற பாடல்களை கேட்டு மகிழ்ச்சி அடையலாம்.
இந்த வசதி முதலில் பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது; தற்போது அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த வசதி கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.