பட்ஜெட்ல இவ்வளவு சிறப்பம்சங்களா? அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிவீசிய நிதியமைச்சர்.. ஆந்திரா பீகாருக்கு அடித்த லக்..

By John A

Published:

நியூ டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக முழுபட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயம், தொழில்துறை, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அதிக அளவிலான சலுகைகள் தரப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

  • 26000 கோடியில் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் கட்டித் தரப்படும்
  • சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் புதிய தொழில் வழித்தட சாலைத் திட்டம்
  • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டித் தர இலக்கு
  • குறு, சிறு, நடுத்தர உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு 100 கோடி வரையில் கடன் திட்டங்கள்

பட்ஜெட்ல என்னென்ன இருக்கு? சமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா மத்திய பட்ஜெட்?

  • கிராமப்புற மேம்பாட்டிற்கு 2.66 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • சொத்து வாங்கும் பெண்களுக்கு கூடுதலாக வரிச்சலுகை
  • முத்ரா கடனுதவி திட்டம் 10 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக அதிகரிப்பு
  • பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டிற்கு 3 இலட்சம் கோடி ஒதுக்கீடு
  • உணவின் தரத்தினை பரிசோதிக்க மேலும் 100 தரப் பரிசோதனை மையங்கள்
  • பீகாருக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கும் திட்டம்
  • இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு 2 இலட்சம் கோடி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற் பூங்காக்கள் திறக்கப்படும்
  • அரசு, தனியார் பங்களிப்போடு தொழிலாளர்களுக்கு டாமிட்டரி பாணியில் தங்கும் வாடகை விடுதிகள்
  • அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள்
  • ஆந்திரத் தலைநகர் அமராவதியை மேம்படுத்த 15,000 கோடி சிறப்பு நிதி
  • முன்னனியில் உள்ள 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் உதவித் தொகை 6,000
  • உற்பத்தித் துறையில் புதிதாக 15இலட்சம் வேலைவாய்ப்புகள்
  • புதிய சாலை இணைப்புத் திட்டங்களை மேம்படுத்த 26,000 கோடி ஒதுக்கீடு
  • நாட்டில் உள்ள 100 பெரிய நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்
  • புதிதாக இ-வணிகவியல் மையங்கள்
  • வீடுகளில் மேல் சோலார் மின்தகடுகள் அமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் பெறலாம்
  • அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பதிவுக் கட்டணத்தினைக் குறைக்க நடவடிக்கை

இதுபோன்ற இன்னும் பல சலுகைகள் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் உள்ளதால் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.