உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் குழு, ஐந்து நாட்கள் விண்வெளியில் பயணித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளது. புளோரிடா கடலில் டிராகன் கேப்ஸ்யூல் இறங்கியது. இந்த செய்தியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
இந்த வணிக ரீதியான விண்வெளி பயணம், நாசா அடிப்படையில் முக்கிய சாதனை என்று கூறியுள்ளது. இந்த விண்வெளி பயணத்தில் கோடீஸ்வரர் ஐசக்மேன், ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை வீரர் ஸ்கார் போடீட் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் ஷாரா கில்லீஸ், அன்னா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விண்வெளி பயணம் கடந்த 11-ம் தேதி துவங்கியது.
இந்த குழு பூமிக்கு 700 கிலோ மீட்டர் உயரத்தில் விண்வெளியில் நடை பயிற்சி மேற்கொண்டது. தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத ஐசக்மேன் மற்றும் ஷாரா கில்லீஸ் விண்வெளியில் மிதந்தபடி நடை பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயணத்தில் 36-க்கும் மேற்பட்ட விஞ்ஞான பரிசோதனைகள் செய்யப்பட்டது.