நாளுக்கு நாள் சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமாக சென்னை உள்ளதால் கட்டமைப்பு வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தினைப் பொறுத்தவரை சென்னையின் முக்கிய அடையாளமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களை சென்னை சென்ட்ரல் இணைப்பதால் எப்போதுமே சென்ட்ரல் ரயில்நிலையம் பரபரப்பாகக் காணப்படும். இங்கு பயணிகளின் கையாளுவதற்குச் சிரமமாக இருந்ததால் அடுத்த ரயில்நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில் முனையமாக மாற்றப்பட்டது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் புறப்பட்டுச் செல்கிறது.
தற்போது தாம்பரத்தினை தாண்டி சென்னை நகரம் விரிவடைந்து விட்டதால் தாம்பரம் ரயில் நிலையமும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்படி சென்ட்ரல், தாம்பரம், எக்மோர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களும் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிவதால் தெற்கு ரயில்வே சென்னையில் நான்காவதாக புதிய ரயில் முனையம் அமைக்க முடிவெடுத்தது. அதன்படி இதற்குரிய பணிகள் ஆரம்பமாகியது.
ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!
முதலில் வில்லிவாக்கம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக தற்போது சென்னையின் நான்காவது ரயில் முனையம் ரெம்பூரில் அமைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்குரிய திட்ட அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பூரைச் சுற்றி நிறைய தொழிற்பேட்டைகள், தொழில் நிறுவனங்கள், ஆவடி மாநகராட்சி, திருவள்ளுர் ஆகியவை உள்ளதால் பெரம்பூர் ரயில் முனையம் அமைக்க சரியான இடமாக உள்ளது.
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை அருகில் இந்த முனையம் அமைய உள்ளது. இதற்காக சுமார் 428 கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைய மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும்.
பெரம்பூரில் அடுத்த ரயில்நிலையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.