ஷாக்கடிக்கும் மின் கட்டண உயர்வுக்கு பட்ஜெட்டில் இடம்பெற்ற குளுகுளு அறிவிப்பு.. இனி 300 யூனிட் இலவசம்..

By John A

Published:

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. மேலும் வருமான வரி உச்ச வரம்பு 3 இலட்சம் வரை உயர்த்தப்பட்டது. இதுமட்டுமன்றி கட்டமைப்பு, வேளாண்மை, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கான அதிக திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மின் கட்டண உயர்வுக்கு ஆறுதல் தரும் அறிவிப்பாக சோலார் மின்தகடுகள் பொருத்துவதன் மூலம் 300 யூனிட் வரை மின்சாரம் பெறலாம் என்ற சூப்பர் அறிவிப்பினையும் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

எகிறிவரும் மின்கட்டண உயர்வுக்கு மாற்றாக சூரிய மின்தகடுகளை வீட்டில் பொருத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமரின் சூரிய வீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி பயனாளர் இதற்கென கொடுக்கப்பட்டுள்ள செயலி மூலமாக விண்ணப்பித்தால் மானியத்துடன் சூரிய மின்தகடுகள் வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்படும்.

இதெல்லாம் மத்திய பட்ஜெட்ல கவனிச்சீங்களா? வருமான வரி உச்சவரம்பு குறித்த முக்கிய அறிவிப்பு

பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதன்படி சுமார் 1 கோடி வீடுகளுக்கு சோலார் மின் தகடுகள் பொருத்தப்படும் என சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. இத்திட்டத்தில் குடியிருப்பு வீடுகளுக்கு 1கிலோ வாட் முதல் 2 கிலோ வாட் வரை சோலார் தகடுகள் பொருத்தப்படும். இதற்காக பயனாளிக்கு ரூ.30,000 வரை மானியம் வழங்கப்படும். மேலும் கூடுதலாகப் பொருத்துவோருக்கு கிலோவாட் ஒன்றிற்கு ரூ.18,000 மானியம் வழங்கப்படும்.

பட்ஜெட்ல இவ்வளவு சிறப்பம்சங்களா? அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிவீசிய நிதியமைச்சர்.. ஆந்திரா பீகாருக்கு அடித்த லக்..

பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறலாம். ஒரு சூரியத் தகடு ஒரு நாளில் சுமார் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். நாம் செலுத்திய முதலீடு குறுகிய காலத்திலேயே திரும்பப் பெறலாம். இதற்காக உடனடி கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.