டிப்ஸ்களை பெற்று பங்குகளை வாங்கலாமா? பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுவது என்ன?

By Bala Siva

Published:

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டிப்ஸ் தருவதற்கான வட இந்தியாவில் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அந்த நிறுவனங்கள் தொலைபேசி மூலம் பங்குச்சந்தை வர்த்தகங்களை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு பங்குச்சந்தை டிப்ஸ் தருகின்றன.

இந்த நிலையில் இவ்வாறு வேறு ஒருவர் கொடுக்கும் டிப்ஸ்களை நம்பி பங்குகளை வாங்கலாமா என்றால் கண்டிப்பாக வாங்க கூடாது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தையை பொருத்தவரை ஒருவர் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளார் என்றால் அவர் தன்னை வர்த்தகத்திற்கு தயார் படுத்திக் கொண்டுதான் அதில் களமிறங்க வேண்டும். ஒரு தெளிவான திட்டத்தை வகுத்து, அதை முழுமையாக செயல்படுத்தும் திறன் வந்தால் மட்டுமே பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டும்.

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் டிப்ஸ்களை நம்பி பங்குகளை வாங்கினால் கண்டிப்பாக அது நஷ்டத்தில் தான் கொண்டு போய் நிறுத்தி விடும். பொதுவாக பங்குச்சந்தையில் பங்குகள் வாங்குவதோ விற்பதோ அதை சம்பந்தப்பட்ட நபர் தான் முடிவு எடுக்க வேண்டும், எந்த பங்கை எவ்வளவு விலைக்கு வாங்க வேண்டும், எவ்வளவு லாபம் கிடைத்தால் எப்போது விற்க வேண்டும், ஒருவேளை நஷ்டம் வந்தால் அந்த நஷ்டத்தை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுகளை பங்குகளை வாங்கும் மற்றும் விற்பவர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

டிப்ஸ்களை நம்பி ஒருபோதும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.