திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது!.. செல்வபெருந்தகை பேட்டி…

தமிழக அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்…

selva perunthagai

தமிழக அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்க துவங்கியிருக்கிறது.. இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என ஸ்டாலின் கூறினர். ஆனாலும், காங்கிரஸ் அதை அந்த கோரிக்கையை விடவில்லை..

ஆட்சி மற்றும் அதிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது மட்டுமல்லாமல், வருகிற சட்டசபை தேர்தலில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள், அமைச்சர் பதவிகள், இரண்டு ராஜ்ய சபா சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களை காங்கிரஸ் கேட்பதாக தெரிகிறது. ஆனால் திமுக இதற்கு சம்மதிக்கவில்லை..

ஒருபக்கம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகள், அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி என காங்கிரஸுக்கு தவெக ஆசை காட்டுகிறது. அதோடு, மார்ச் மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வரும்போது அவர் விஜயை சந்திக்க வாய்ப்பிருக்கிறது எனவும் சிலர் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் சொன்ன தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ‘திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேறு யாருடனும் நாங்கள் பேசவில்லை’ என கூறியிருக்கிறார்.