தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகத்தின்’ அசுர வளர்ச்சி, பிரதான கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே நடந்த சமீபத்திய சந்திப்பு, விஜய்க்கு எதிராக திமுக ஒரு புதிய வியூகத்தை வகுக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இளைஞர்கள் மற்றும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து, விஜய்யின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட சீமானுக்கு திமுக ‘டாஸ்க்’ கொடுத்துள்ளதா என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
ஸ்டாலின் – சீமான் சந்திப்பின் பின்னணி:
சமீபத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சீமான் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வழக்கம் போல, ஒரு அரசியல் தலைவரின் குடும்பத்தில் நடந்த இறப்பிற்கு, நேரில் சென்று ஆறுதல் கூறுவது மரபு. ஆனால், இந்த முறை மு.க.முத்துவின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்கு செல்லாமல், முதல்வர் ஸ்டாலின் சென்று அவரை சீமான் சந்தித்துள்ளார். இதுவே, “மு.க.முத்து இறந்ததற்கு துக்கம் கேட்க அவரது வீட்டிற்கு தானே சென்றிருக்க வேண்டும், ஸ்டாலினை ஏன் சீமான் பார்க்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பு, விஜய்க்கு எதிரான ஒரு கூட்டணியின் ஆரம்பமா என்ற சந்தேகத்திற்கு வழிவகுத்துள்ளது.
அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, ஸ்டாலின் மற்றும் சீமான் இருவரும் விஜய்க்கு எதிராக ஒரு மறைமுக ‘சதி’யில் ஈடுபடலாம் என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்குக் காரணங்கள்:
சீமானின் கோபம்: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான இளைஞர்கள் வாக்குகளை கணிசமாக பறித்துவிட்டதாக சீமான் கருதுகிறார். இது சீமானுக்கு பெரும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது வாக்கு வங்கி சிதைக்கப்படுவதை தடுக்க, விஜய்க்கு எதிராக செயல்பட அவர் தயாராக இருக்கலாம்.
ஸ்டாலினின் கவலைகள்: முதல்வர் ஸ்டாலினுக்கும் விஜய்யின் அசுர வளர்ச்சி கவலை அளிப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி, ஆட்சிக்கு எதிரான வாக்குகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை பறித்துவிட்டதாக திமுக அஞ்சுகிறது. இது திமுகவின் வெற்றியை பாதிக்கக்கூடும் என்பதால், விஜய்யின் வளர்ச்சியை தடுக்க ஸ்டாலின் தரப்பும் ஆர்வமாக உள்ளது.
எனவே, இந்த இரு தரப்பினரின் பொதுவான நோக்கம் விஜய்யின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதாகும். விஜய்யின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தங்கள் வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்த அரசியல் சூழ்ச்சிகள் குறித்து விஜய் ஆதரவாளர்கள் கவலைப்படாமல், “எத்தனை சீமான் வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் மக்கள் செல்வாக்கும், தனிப்பட்ட கவர்ச்சியும் இத்தகைய அரசியல் வியூகங்களை முறியடித்து வெற்றி பெறும் என்று அவர்கள் நம்புகிறார்கள். விஜய்யின் அரசியல் வருகை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இது இத்தகைய சதித்திட்டங்களால் எளிதில் மாற்றப்பட முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்ஹில் ஸ்டாலின்-சீமான் சந்திப்பு, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தில் எந்த அளவு தாக்கம் செலுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
