மகளின் பள்ளி டீச்சருடன் கனெக்சன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்.. தொழிலதிபரின் பரிதாப நிலை..!

  பெங்களூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி என்பவர் பணியாற்றும் பள்ளியில், பிரபல தொழிலதிபர் ராகுல் தனது மகளைக் சேர்த்து இருந்தார். மகளின் படிப்பு குறித்து அவ்வப்போது டீச்சரிடம் விசாரிக்கும் பழக்கத்தில், இருவருக்கும் இடையே…

teacher

 

பெங்களூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி என்பவர் பணியாற்றும் பள்ளியில், பிரபல தொழிலதிபர் ராகுல் தனது மகளைக் சேர்த்து இருந்தார். மகளின் படிப்பு குறித்து அவ்வப்போது டீச்சரிடம் விசாரிக்கும் பழக்கத்தில், இருவருக்கும் இடையே நட்பு உருவானது. காலப்போக்கில் அந்த நட்பு காதலாக மாறியது.

தொழிலதிபர் ராகுல், ஆசிரியை ஸ்ரீதேவிக்கு தனியாக ஒரு மொபைல் போன் மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுத்ததாகவும், அதன் மூலம் இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீதேவி, ராகுலிடம் ₹4 லட்சம் அவசரமாக தேவை என்று கேட்டதாகவும், அவர் அந்த பணத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், அவ்வப்போது பணம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ₹15 லட்சம் தேவை என்றும், தன்னுடன் உறவை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது.

அது மட்டுமின்றி ராகுலின் குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் நேரடியாக வீட்டிற்கு சென்று பணத்தை மிரட்டி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்ட, ராகுல் குஜராத்துக்கு வீட்டை மாற்ற முடிவு செய்தார்.

இதைக் கண்டு கொந்தளித்த ஸ்ரீதேவி, தனது சகாக்கள் இருவருடன் சேர்ந்து, “மொத்தமாக ₹20 லட்சம் வழங்க வேண்டும்; இல்லையெனில் நாம் இருவரும் அந்தரங்கமாக இருந்த போது எடுத்த வீடியோக்களை வெளியிடுவேன்” என்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறு வழியில்லாமல் தொழிலதிபர் ராகுல் காவல்துறையை அணுகினார். இதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதேவி மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.

தற்போது, ஸ்ரீதேவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மூவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.