மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஜூன் 5ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுட்டெரிக்கும் கடுமையான கோடை வெயிலின் காரணமாக மாணவர்களால் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இயலாது. எனவே பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர் பலரின் வேண்டுதலின்படி பள்ளி திறப்பானது ஜூன் ஏழாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்னும் வெயில் குறையாத காரணத்தால் இன்று நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், கல்வித்துறை அதிகாரிகளும், தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்தனர்.
இதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.