சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று கூட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையிலிருக்கின்றன. இன்று எங்கு விடுமுறை இருக்கிறது என்பதை காணலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் அல்லாமல், அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, பிற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.