9-5 வேலை நேர முறையை ஏஐ டெக்னாலஜி ஒழித்துவிடும்.. லிங்க்ட்-இன் உரிமையாளர் அதிர்ச்சி தகவல்..!

Published:

கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் 9-5 என்ற வேலை நேர முறை ஊழியர்களுக்கு இருக்கும் நிலையில் அது இன்னும் 20 ஆண்டுகளில் இது மறைந்து விடும் என்றும் ஏஐ டெக்னாலஜி மனிதர்களின் வேலை நேரத்தை மாற்றி விடும் என்றும் லிங்க்ட்-இன் உரிமையாளர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஏஐ டெக்னாலஜியின் வளர்ச்சி மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து வருகிறது என்று கூறினாலும் இன்னும் சிலர் மனிதர்களின் உதவி இல்லாமல் ஏஐ டெக்னாலஜி செயல்படாது என்றும் எனவே மனிதர்களுக்கு மாற்று ஏஐ டெக்னாலஜி என்று கூறுவதை நம்ப முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ டெக்னாலஜி நுழைந்துவிட்ட நிலையில் 100 பேர் பார்க்கும் வேலையை ஏஐ டெக்னாலஜி பார்த்து வருகிறது என்றும் வேலைவாய்ப்புக்கு இந்த டெக்னாலஜி பெரும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லிங்க்ட்-இன் உரிமையாளர் ஹாஃப்மேன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’2034 ஆம் ஆண்டு 9-5 என்ற வேலை நேர முறை முற்றிலும் ஒழிந்து விடும் என்றும் வேலை கிடைத்தால் போதும் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்கிறோம் என்று ஊழியர்களை கூறும் நிலைக்கு வந்து விடும் என்றும் அந்த அளவுக்கு ஏஐ டெக்னாலஜி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில துறைகளில் ஏஐ நுழைய முடியாது என்றும் அதெல்லாம் மனிதர்கள் மட்டுமே செய்யும் வேலையாக இருக்கும் என்றும் பல மடங்கு நவீன டெக்னாலஜி வந்தாலும் மனிதர்களின் தேவை இருக்கத்தான் செய்யும் என்றும் அவருடைய கருத்துக்கு கமெண்ட் பதிவாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...