சாட் ஜிபிடி தவறான தகவல் அளிக்க வாய்ப்பு உள்ளதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

சாட் ஜிபிடியில் கிடைக்கும் பெரும்பாலான தகவல்கள் உண்மையானதாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் ஒரு சில தவறுகள் அதில் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு அறிக்கையின் நிலையாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த டெக்னாலஜியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சாட் ஜிபிடி, மனிதர்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு சரியான பதிலை தருகிறது என்றும் அது மட்டும் இன்றி விதவிதமான பதிலையும் தந்து கொண்டிருக்கிறது என்பதால் வேலை மிகவும் சுலபமாக முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாட் ஜிபிடியில்  சில தவறான தகவல்களும் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அதில் உள்ளிட்டு உள்ள டேட்டாக்களை பொறுத்து தகவல்கள் வெளிவரும் என்றும் ஆய்வறிக்கை கூறி உள்ளது.

எடுத்துக்காட்டாக strawberry என்ற சொல்லில் எத்தனை r என்று கேட்டபோது இரண்டு rஎன்று பதில் கூறியுள்ளது. அதற்கு விளக்கம் கேட்டபோது மூன்று r என மாற்றி பதில் அளித்ததாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதை போல் சில தவறுகள் சாட் ஜிபிடியில் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எனவே சாட் ஜிபிடியில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் 100% உண்மை என நம்பி பயன்படுத்தினால் அதனால் விளைவுகள் ஏற்படும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள்  கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 90% சரியான தகவலைத்தான் சாட் ஜிபிடி தருகிறது என்றும் மனிதர்கள் கூட சில சமயம் தவறான தகவல்களை தந்து விடுவார்கள் என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.