4 வருடங்கள் ஆகியும் விற்பனையில் குறையாத Samsung Galaxy Note 10: என்னென்ன சிறப்பம்சங்கள்?

Published:

சாம்சங் நிறுவனத்தின் ஒரு சில தயாரிப்புகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் எத்தனை புதுமையான மாடல்கள் வந்தாலும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான Samsung Galaxy Note 10 என்ற மாடல் ஸ்மார்ட் போன் இன்றளவும் அதிக விற்பனையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு வருடம் ஆகியும் விற்பனையில் குறையாத இந்த ஸ்மார்ட் ஃபோனில் அப்படி என்னதான் விசேஷங்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் Samsung Galaxy Note 10 கடந்த 2019ஆ, ஆண்டு வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சக்திவாய்ந்த பிராஸசர், சிறந்த காட்சி மற்றும் சிறப்பு அம்சங்கள் கொண்ட கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எஸ் பென் ஸ்டைலஸை கொண்ட ஒருசில ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்

மேலும் Samsung Galaxy Note 10 ஸ்மார்ட்போன் Aura Black, Aura Glow மற்றும் Aura Red ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 6.3-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 1080 x 2280 பிக்சல்கள் ரெசலூசன், 401ppi பிக்சல் ஆகியவற்றை கொண்ட இந்த போனில் Samsung Exynos 9825 octa-core பிராஸசர் உள்ளது.

மேலும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ், 12MP + 16MP + 12MP டிரிபிள்-லென்ஸ் பின்புற கேமரா மற்றும் 10MP செல்பி கேமிராவுடன் 3500mAh பேட்டரியும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் கொண்ட Samsung Galaxy Note 10 இந்தியாவில் ரூ.38,800 முதல் விற்பனையாகி வருகிறது.

Samsung Galaxy Note 10 ஸ்மார்ட்போனின் நிறைகள் குறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நிறைகள்:

* சக்தி வாய்ந்த பிராஸசர்
* சிறந்த டிஸ்ப்ளே
* பல்துறை கேமரா அமைப்பு
* எஸ் பென் ஸ்டைலஸ்
* நீண்ட பேட்டரி ஆயுள்

குறைகள்

* விலை உயர்ந்தது
* ஹெட்ஃபோன் ஜாக் இல்லை
* விரிவாக்கக்கூடிய சேமிப்பு இல்லை

மேலும் உங்களுக்காக...