ஜூலை 7ல் இந்தியாவில் வெளியாகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.. ரூ.19,000க்கு வேற லெவல் சிறப்பம்சங்கள்..!

By Bala Siva

Published:

சாம்சங் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தை கடந்த பல ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் தக்க வைத்துக்கொண்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அவ்வப்போது புதிய மாடல்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் ஜூலை 7ஆம் தேதி Samsung Galaxy M34 5G என்ற மாடலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாடல் குறித்த சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

சாம்சங் நிறுவனம் Galaxy M34 5G என்ற மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 120Hz அம்சத்துடன் கூடிய 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 1080 பிராஸசர், 6GB/8ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது. அதேபோல் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையின்படி, Galaxy M34 5G ரூ. இந்தியாவில் ரூ.18,990 என்ற
விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy M34 5G ஸ்மாட்போனி முக்கிய விவரக்குறிப்புகள் இதோ:

* 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 1080 பிராஸசர்
* 6ஜிபி/8ஜிபி ரேம்
* 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா
* 13MP செல்பி கேமிரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

Galaxy M34 5G ஸ்மார்ட்போன் நல்ல செயல்திறன் மற்றும் அம்சங்களை வழங்கும் மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் இந்த போன் அறிமுகமாகும்போது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.