அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகும் Realme Narzo 60 5G: விலை கொஞ்சம் அதிகமோ?

Published:

ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கடந்த சில ஆண்டுகளில் வளர்த்துள்ளது என்பதும் இந்நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு மாடல் ஸ்மார்ட்போனும் மிகப்பெரிய விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

பொதுவாக ரியல்மீ ஸ்மார்ட் போன்கள் ரூபாய் 20 ஆயிரத்துக்குள் மிகச்சிறந்த அம்சங்களுடன் வரும் நிலையில் தற்போது தற்போது 20 ஆயிரத்திற்கும் மேல் ஒரு புதிய மாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் இந்த போன் குறித்த சிறப்பம்சங்களை தற்போது பார்ப்போம்.

Realme Narzo 60 Pro 5G மற்றும் Realme Narzo 60 5G ஆகிய இரண்டு மாடல்கள் இந்தியாவில் ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme Narzo 60 Pro 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 920 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 120Hz அம்சத்துடன் 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 64MP மெயின் சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் இந்த போனில் உள்ளது. 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

அதேபோல் Realme Narzo 60 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 90Hz அம்சத்துடன் 6.6-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 50MP மெயின் சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் இந்த போனில் உள்ளது. முன்பக்கத்தில், போனில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் என்பதும், அதேபோல் இரண்டுமே 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் Realme Narzo 60 Pro 5G விலை சுமார் ரூ.22,999 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் Realme Narzo 60 5Gயின் விலை ரூ.18,999 என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...