புதுக்கோட்டை அருகே புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு.. பக்தர்கள் அதிர்ச்சி

By Keerthana

Published:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.இங்கு மலைமேல் முருகன் ஆறுமுகங்களுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு சாமி சிலைகளை மர்ம ஆசாமிகள் உடைத்து சேதப்படுத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலைமேல் முருகன் ஆறுமுகங்களுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். முருகன கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தார் சாலை அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்களை கவரும் வகையில் சாலையோரத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன், மயில், மான், சிங்கம், குரங்கு போன்ற சிலைகள் சிமெண்ட்டால் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் எல்லாம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை ஆகும்.

இந்நிலையில் சாலையோரத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன், மயில், மான், சிங்கம், குரங்கு போன்ற சிலைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில்,. இந்த சிலைகளை மர்ம ஆசாமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஏற்கனவே 2 முறை இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த முறை இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தபோது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், மீண்டும் தற்போது மர்ம ஆசாமிகள் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போதிய பாதுகாப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வருத்தப்படும் அளவிற்கு சங்கடமான நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறத. அதுமட்டுமின்றி மலைக்கு செல்லும் சாலையோரத்தில் இருக்கும் கான்கிரீட் கட்டைகளில் அமரும் சிலர் அசுத்தப்படுத்துகிறார்கள். எனவே கோவில் மலைப்பாதையில் போலீஸ் ரோந்தை அதிகப்படுத்தவும், சிலைகள் அருகே யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...