ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா அணு ஆயுதத்தை உக்ரைன் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை தயாரித்து உக்ரைன் நாட்டிற்கு வழங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த ரஷ்யா, தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும் என்ற தனது அணு ஆயுத கொள்கை முடிவாக ரஷ்யா மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை ஏவ அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், உலகின் அனைத்து பங்கு சந்தைகளும் படு மோசமாக சரியும் என்று கூறப்படுகிறது.
எப்போதுமே பங்குச்சந்தை சரிந்தால், அதில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை எடுத்து தங்கம் தான் வாங்குவார்கள் என்பதால் தங்கம் தேவை அதிகம் இருக்கும் என்றும், இதனால் தங்கம் விலை உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.