பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கிறதா ரஷ்யா? நட்பு நாடான இந்தியாவை ரஷ்யா பகைத்து கொள்ளுமா? ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கினால் நமக்கு ஆதரவு என நினைக்கும் பாகிஸ்தான் முட்டாள்கள்.. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? அதுதான் மோடியின் ராஜதந்திரம்..

பாகிஸ்தானுக்கு JF-17 போர் விமானங்களுக்கு ஜெட் என்ஜின்களை (RD-93MA) ரஷ்யா வழங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவின் கவலை குறித்து சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்தியா கவலைப்பட தேவையில்லை என்பது தான் பெரும்பாலானோர்…

ind pak russia

பாகிஸ்தானுக்கு JF-17 போர் விமானங்களுக்கு ஜெட் என்ஜின்களை (RD-93MA) ரஷ்யா வழங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவின் கவலை குறித்து சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்தியா கவலைப்பட தேவையில்லை என்பது தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

சோவியத் யூனியன் காலத்திலிருந்தே இந்தியா – ரஷ்யா உறவு நீடித்து வருகிறது. 1971 போரின்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் போர் கப்பல்கள் வங்காள விரிகுடாவுக்கு அனுப்பப்பட்டபோது, ரஷ்யா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது வரலாற்று உண்மை.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத அமைப்புகளில் “கில் ஸ்விட்ச்” (Kill Switch) அல்லது மறைமுக ஊடுருவல் (Backdoors) வசதிகள் இருக்கலாம். அதாவது, ஆயுதங்களை கொள்முதல் செய்த பிறகும், தயாரித்த நாட்டால் அவற்றை ரிமோட் மூலம் செயலிழக்க செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும். உதாரணமாக, ஆஸ்திரேலியா வாங்கிய போர் விமானங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் இதில் அடங்கும். ஆனால், ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கிய மிக் (MiG), சுகோய் (Sukhoi) போன்ற எந்த ஆயுதங்களிலும் இதுபோன்று ‘ரிமோட் கண்ட்ரோல்’ வசதியை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இதனால், ரஷ்யா நம்பகமான ஆயுத விநியோகஸ்தராக கருதப்படுகிறது.

உலக அரசியலில், அனைத்து நாடுகளும் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களுக்காக செயல்படுகின்றன. ரஷ்யா – சீனா உறவு நெருக்கமாக இருந்தாலும், ரஷ்யா இந்தியாவுக்கு பிரம்மோஸ் போன்ற அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்கிறது. இது சீனாவிற்கு சவால் என்றாலும், சீனா இதை ஒரு அரசியல் முதிர்ச்சியாகவே’ பார்க்கிறது.

அதேபோல் ரஷ்யா பாகிஸ்தானுக்கு சில ஜெட் என்ஜின்களை விற்பனை செய்தாலும் அது ஒரு சிறிய வர்த்தக நடைமுறை தான். இது இரு நாடுகளின் நீண்டகால உறவை பாதிக்காது. எதிர்காலத்தில் ஒரு போர் ஏற்பட்டால், ரஷ்யா இந்தியாவின் பக்கம் தான் நிற்கும்; பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்காது.

2015 முதல் 2021 வரை ரஷ்யாவும் பாகிஸ்தானும் இணைந்து ‘துர்ஜ்பா’ என்ற கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இந்தியா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுபோன்று சிறிய விஷயங்களை புறக்கணிக்க வேண்டியது பெரிய உறவுக்கு அவசியமானது.

ஆகவே, பாகிஸ்தானுக்கு ஒரு சில ஆயுதங்களை ரஷ்யா விற்பனை செய்வது, இந்தியாவுடனான அதன் நீண்டகால நட்பு மற்றும் கூட்டாண்மையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உறுதியளித்ததாக கூறிய நிலையில், பிரதமர் மோடி டிரம்புக்கு அப்படி எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்று இந்திய தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிரம்ப், இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவே இத்தகைய கூற்றுகளை முன்வைக்கிறார்.

இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் கொள்கை, சந்தை விலை, தரமான விநியோகம் மற்றும் தேசிய நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்திற்காக ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை.

உக்ரைன் போருக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தபோது, இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்தது. இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு ஒரு பாசிட்டிவ் மாற்றமாக செயல்பட்டது.

இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் அடியாகும். இது இந்தியா – ரஷ்யா உறவுக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிவது, இந்தியாவின் சுயாட்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கும் உகந்தது அல்ல. ரஷ்யாவுடனான வலுவான உறவு, மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஒரு பேரம் பேசும் சக்தியை வழங்குகிறது.

அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால், பிரதமர் மோடிக்கு உள்நாட்டு அரசியலில் கடும் சவால்கள் எழும். மலிவு விலையில் கிடைக்கும் எண்ணெயை நிறுத்தினால், எதிர்க்கட்சிகள் இதை பிரதமருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.

இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தக் கூடாது. அமெரிக்காவின் வலியுறுத்தலுக்கு இணங்கி, வேண்டுமானால் அமெரிக்காவிடம் இருந்து அதிகப்படியான எண்ணெயை வாங்கி தனது இருப்பில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், புவிசார் அரசியல் சமநிலையில் ரஷ்யா முக்கியமானது என்பதால், அதன் பொருளாதார நலன்களை பாதிக்கும் முடிவுகளை இந்தியா எடுக்காது என்பதும், அதேபோல் ரஷ்யாவும் பாகிஸ்தானுக்கு ஒருசில ஆயுதங்களை விற்பனை செய்தாலும் எந்த காரணத்தை முன்னிட்டும் ரஷ்யா, இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.