1.8 கிமீ பயணம் செய்வதற்கு 700 ரூபாய் கட்டணம் கேட்டதாக ஊலா மற்றும் உபேர் மீது நெட்டிசன் ஒருவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் லேசாக மழை பெய்ததாகவும் இதனால் தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல ஓலா புக் செய்ததாகவும், வீட்டிற்கு வந்ததும் 700 ரூபாய் கட்டணம் கேட்டது தன்னை அதிர்ச்சி கொள்ளாக்கியதாகவும் லிங்க்ட்-இன் பயனாளி சூர்யா பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார்.
இது ஹர்ஷத் மேத்தா செய்த மோசடியை விட மிகப் பெரியதாக இருக்கிறது என்றும் நாட்டில் லேசாக மழை வந்திடக் கூடாது, உடனே உபேர்,ஓலா டிரைவர்கள் கட்டணத்தை 300 சதவீதம் உயர்த்துகின்றனர் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கும் இதே மாதிரி அனுபவங்கள் இருந்தது என்றும், அவசர காரியமாக செல்வதை செல்லும் போது இது மாதிரி பல மடங்கு கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் 1.8 கிமீ தூரம் பயணம் செய்வதற்கு 700 ரூபாய் என்பது அப்பட்டமான பகல் கொள்ளை என்றும் இதுகுறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்றும் இவர்களை கட்டுப்படுத்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.