இனி ரூ.5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை செய்யலாம்.. ஆனால் சில நிபந்தனைகள்..!

Published:

NPCI என்ற அமைப்பு  UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரித்துள்ளது.  இதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான சுற்றறிக்கையில், NPCI சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க தேவையுள்ளதாக குறிப்பிட்ட நிலையில் இன்று முதல் ரூ.5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வரி செலுத்துதல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட சில வகைகளுக்கு மட்டுமே ரூ. 5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.

இருப்பினும் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய பயனர்களின் வங்கிகள் உறுதி செய்வது மிகவும் முக்கியம். எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள் மற்றும் UPI பயன்பாடுகள், சரிபார்க்கப்பட்ட வரி செலுத்தும் வணிகர்களுக்கான MCC 9311 இன் கீழ் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரம்பை ஆதரிக்க தங்கள் அமைப்புகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

UPI மூலம் வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்த NPCI எடுத்திருக்கும் முடிவு ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இது டிஜிட்டல் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவை துரிதமாக முன்னோக்கி கொண்டு செல்கிறது’ என்று NTT DATA பேமென்ட் சர்வீசஸ் இந்தியாவின் CFO ராகுல் ஜெயின் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...