ரயில்வே பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து, கரப்பான் பூச்சிகளை நீக்கும் ஸ்பிரே அடித்தனர். ஆனால், எலிகளுக்கான பிரச்சனைக்கு ஏற்ற ஸ்பிரே இல்லாமல், கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தது துர்நாற்றத்தை மேலும் அதிகரித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், எலிகள் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்த அவர், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். ரூ.2000 செலுத்தி ஏசி டிக்கெட் வாங்கினேன், ஆனால் எனக்குக் கிடைத்தது எலிகளும் ஒரு தூக்கமற்ற இரவும் தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, தனது PNR எண்ணையும், ரயில் பெட்டி எண்ணையும் பகிர்ந்ததோடு, இருக்கையின் அருகே இருந்த எலியின் புகைப்படத்தையும் பதிவிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் வேடிக்கையான மற்றும் கிண்டலான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
“நீங்கள் உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஏனெனில் ரயில்வே உங்கள் பயணத்திற்காக செல்ல பிராணிகளையும் வழங்கியுள்ளது” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது தான் ரயிலில் செல்ல பிராணிகள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்கிறேன்” என்று இன்னொருவர் நையாண்டியாக பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும், ரயில்வே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.