isha

வடிவேலு அவர்களோட உண்மையான முகம் யாருக்குமே தெரியாது… கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்கமாட்டேன்… நடிகை சோனா ஓபன் டாக்…

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு. பிறகு நடிகர்…

sona

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு.

பிறகு நடிகர் விஜய்காந்த் வடிவேலுவை பல திரைப்படங்களுக்கு பரிந்துரைத்து தூக்கி விட்டார். தனது அசாத்தியமான நகைச்சுவை மற்றும் உடல் மொழியின் மூலம் மிகவும் பிரபலமானார் வடிவேலு. இவரை வைகைப்புயல் என்றும் அழைக்கின்றனர்.

எந்த கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை சிரிக்க வைப்பதில் வடிவேலு தவறுவதில்லை. இவரது நடிப்புக்கு சான்றாக பல திரைப்படங்கள் இருக்கிறது. முன்னணி நடிகர்கள் பலர் படத்திலும் நடித்திருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் வடிவேலுவை பற்றி கவர்ச்சி நடிகை சோனா ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார்.

நடிகை சோனா கூறியது என்னவென்றால் வடிவேலு அவர்களின் உண்மையான முகம் உங்கள் யாருக்கும் தெரியாது. அவருடன் நடிக்கவே முடியாது. எனக்கு அவருடன் நடிப்பதற்கு பதினாறு படங்களுக்கு வாய்ப்பு வந்தது. பிச்சை கூட எடுப்பேனே தவிர அவருடன் நடிக்க மாட்டேன் என்று நான் கூறிவிட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை சோனா.