தென்னிந்திய கிராமப்புறங்களில் 240 தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் குறித்த ஒரு ஆய்வில், 35.5% பேர் (220 பேரில் 78 பேர்) தொழிலில் மரத்தில் இருந்து கீழே விழுந்த அனுபவம் இருப்பதாக கூறியுள்ளனர். இதில் சிலர் பலத்த காயங்கள், எலும்பு முறிவுகள் (மூட்டு எலும்புகள், முதுகெலும்பு முறிவு, முக எலும்பு முறிவுகள்), நரம்பு காயங்கள், மற்றும் கடுமையான அலர்ஜிகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் உயிரிழப்பு மற்றும் இரண்டு பேர் நிரந்தரமாக கால்களை இயக்க முடியாத நிலைக்கு சென்றதாக பதிவாகியுள்ளது.
இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் உள்ளது கோழிக்கோட்டை சேர்ந்த Altersage Innovations என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
இந்த ஸ்டார்ட்அப்பின் முக்கிய கண்டுபிடிப்பு Coco-bot, இது ஒரு இயந்திர ரோபோட். தென்னை மரம் ஏறி, சரியான தேங்காய்களை தேர்ந்தெடுத்து பறிக்கக்கூடிய ரோபோட். பாரம்பரியமாக மூன்று பேர் இந்த வேலைக்காக தேவைப்படும் நிலையில் இந்த ஒரே ரோபோட் மூன்று பேர் செய்யும் வேலையை செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை Ashin P Krishna என்பவரின் குளியலறையில் தோன்றியது. 2020ஆம் ஆண்டு, 23 வயதான அஷின், ஜேடிடி இஸ்லாம் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இந்திய சயின்ஸ் காங்கிரஸில் கலந்து கொள்ள வாய்ப்பு தவறியதற்கு பின், குளியலறை சாளரத்தில் இருந்த தென்னை மரத்தைப் பார்த்தவுடன், இந்த யோசனை உருவானது. “தானாக ஏறி தேங்காய் பறிக்கும் ரோபோ ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?”
அஷின், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வருட ஆராய்ச்சி செய்து 2021இல் முதல் கோகோ-பாட் மாதிரியை உருவாக்கினர். இந்த முயற்சிக்கு Kerala Startup Mission’s Maker Village, IIM கோழிக்கோடு, Kerala Agriculture University’s Raftaar incubator, மற்றும் NABARD ஆகியவற்றின் உதவியுடன் நிதி மற்றும் வழிகாட்டுதல் கிடைத்தது.
Coco-bot இன் சிறப்பம்சங்கள்
10 கிலோ எடை மட்டுமே கொண்ட இச்சிறிய ரோபோ.
நன்றாக வளர்ந்த தேங்காய்களை கண்டறியும் AI தொழில்நுட்பம்.
5 விநாடிகளில் மரத்தில் பிடித்து வைக்கும் “Locking mechanism”.
தேவையில்லாத தேங்காய்களை பறிக்காமல், நேர்த்தியான தேர்வுப் பறிப்பு.
இந்த தயாரிப்பில் Marico Ltd போன்ற பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன என்பதால் இதன் வணிக வலுவான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
2023இல் Vaiga Hackathon போட்டியில் முதல் பரிசு வென்ற Coco-bot, தற்போதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக தானாக இயங்கக்கூடிய வெர்ஷனை நோக்கி அணி நகர்கிறது.
அஷினுடன் CTO ஆக கோகுல் கிருஷ்ணன், மற்றும் AI மேம்பாட்டுப் பொறுப்பாளராக Alosh Denny பணியாற்றுகிறார்கள். இன்னும் நிதி சேகரித்து, பெரிய அளவில் இந்த தயாரிப்பை சந்தைக்கு கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, இந்திய வேளாண்மையில் AI மற்றும் ரோபோடிக்ஸின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. பழைய விவசாய முறைகள், இப்போது புத்துணர்வுடன் சிரமமில்லாமல் தொடர முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தான் கோகோ-பாட் என இந்த இயந்திர ரோபோட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.