இனி ஆறு, குளங்களில் விழ வேண்டிய நிலை இல்லை.. மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் கூகுள் மேப்..

  கூகுள் மேப் என்ற செயலியை பயன்படுத்தி வாகனங்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் சரியான பாதையில் சென்றாலும், சிலர் தவறான வழியில் செல்லுவதால் ஆறு, குளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வரும் செய்திகள் அடிக்கடி பார்க்கப்பட்டு வருகின்றன.…

Google Maps

 

கூகுள் மேப் என்ற செயலியை பயன்படுத்தி வாகனங்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் சரியான பாதையில் சென்றாலும், சிலர் தவறான வழியில் செல்லுவதால் ஆறு, குளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வரும் செய்திகள் அடிக்கடி பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கூகுள் தற்போது புதிய அம்சத்துடன் கூடிய பயண அனுபவத்தை வழங்கும் வகையில், கூகுள் மேப் செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி தவறுகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அம்சத்தின்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் குறித்து புகார் அளிக்கும் வசதி உள்ளது. சாலையில் எந்தவொரு தடையும் அதாவது சாலை மூடப்படுதல், சாலையில் மரம் போன்ற விழுந்த பொருட்கள், வெள்ளம், துப்புரவு செய்யப்படாத பகுதிகள் ஏதாவது இருந்தால், உடனடியாக அபாய அறிக்கைகள் பெறும் வசதி உண்டு.

மேலும் நாம் செல்லும் பாதையில் உள்ள உணவகங்கள், விடுதிகள், பொழுதுபோக்கு இடங்களை பரிந்துரை செய்யும் வசதி இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த மேம்படுத்தல்களின் மூலம் இனிமையான டிரைவிங் அனுபவத்தை பெறலாம். மேலும், இனி ஆறு, குளங்களில் வாகனங்கள் விழாமல் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிகளை பெற, கூகுள் மேப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். புதிய அம்சங்கள், லேட்டஸ்ட் அப்டேட்டில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.