ஏஐ டெக்னாலஜியை அனைத்து துறைகளும் பயன்படுத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களும் டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது Reddit சமூக வலைதளம் ஏஐ டெக்னாலஜி மூலம் கேள்விகளை கேட்டு பதில் சொல்லும் முறையை சேவையை அறிமுகம் செய்துள்ளது.
Reddit ஆன்சர்ஸ் என்ற இந்த சேவை மூலம் பயனாளிகள் எந்த கேள்வி வேணாலும் கேட்கலாம் என்றும் அதற்கு Reddit ஏஐ உதவியுடன் துல்லியமான பதில்களை சொல்வதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி Reddit விவாத குழுக்களும் இதில் உள்ளன என்பதும் இந்த விவாத குழுக்களில் பல்வேறு பயனர்கள் தங்களுடைய தகவல்களையும் கருத்து பரிமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி கேட்டு பதில் பெரும் இந்த சேவை Reddit பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பதில் பெறுவது மட்டுமின்றி அந்த பதில் தொடர்பான விவாதங்களையும் அணுகலாம் என்றும் முதல் கட்டமாக இந்த சேவை அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் ஆகி உள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.