உடல் சூட்டை தணிக்கும் பெண்களுக்கு உகந்த வெந்தயக் களி! செய்வது எப்படி?

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாகும். கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. வெந்தயக் களி சாப்பிடும் பெண்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.…

vendhaya kali 1

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாகும். கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. வெந்தயக் களி சாப்பிடும் பெண்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.

images 4 18

வெந்தயக் களி செய்ய தேவையான பொருட்கள்:
  • வெந்தயம் – 50 கிராம்
  • புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
  • சுக்கு பொடி – அரை ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
  • கருப்பட்டி – 200 கிராம்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
வெந்தயக் களி தயார் செய்யும் முறை:
  • புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நன்கு ஊறிய வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அரிசியை கொரகொரப்பாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளவும்.
  • கருப்பட்டி கரைந்துதும் அந்த கருப்பட்டி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது வடிகட்டிய கருப்பட்டியை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
  • கருப்பட்டி பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த அரிசி மற்றும் வெந்தய மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  • அதன் பின் ஏலக்காய், சுக்கு பொடி சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
  • சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து களி கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.

அவ்வளவுதான் சுவையான வெந்தயக் களி தயார்!

பெண்கள் பூப்பெய்திய பருவத்தில் அவர்களின் எலும்புகள் உறுதி அடைய கொடுக்கப்படும் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இந்த வெந்தயக் களியும் ஒன்று.