ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கும் என ஒரே மேடையில் நான்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ரஷித்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அதே நேரத்தில், மட்டுமின்றி, அவரது மூன்று சகோதரர்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு மணமகன்களும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த திருமணத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும், நான்கு மணமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷித் தான் திருமணம் நடந்த தனியார் ஓட்டலில் விழாக்கோலம் போல் இருந்ததாகவும், அந்த ஓட்டலை சுற்றி பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
