தங்கம், வெள்ளி புதையல்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லை.. ‘Rare Earth’ கனிம புதையல் பெற்ற வங்கதேசம்..!

  வங்கதேசம், அதன் கடற்கரை மணல்கள், மற்றும் நிலக்கரி சுரங்கப்பகுதிகளில் முக்கியமான மற்றும் அரிதான ‘Rare Earth’ கனிமங்களைக் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக சுரங்கம் நடத்த ஏற்கத்தக்கதாக அமையுமானால், நாச்டின்…

rare earth

 

வங்கதேசம், அதன் கடற்கரை மணல்கள், மற்றும் நிலக்கரி சுரங்கப்பகுதிகளில் முக்கியமான மற்றும் அரிதான ‘Rare Earth’ கனிமங்களைக் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக சுரங்கம் நடத்த ஏற்கத்தக்கதாக அமையுமானால், நாச்டின் பொருளாதார நிலையே மாறும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்த தகவலை வங்கதேச ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த அரிதான கனிமங்கள் ஸ்மார்ட் போன்கள், மின்சார வாகனங்கள், காற்றாலை டர்பைன்கள், மற்றும் ராணுவ உபகரணங்கள் போன்ற பல நவீன தொழில்நுட்ப உற்பத்திகளுக்கு மிகவும் அவசியமானவை. இவற்றின் பெரும்பான்மையான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வங்கதேசத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு, வர்த்தக ரீதியாக சுரங்கம் மேற்கொள்ள ஏற்கத்தக்கதாக இருந்தால், அது உலகளாவிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என உள்நாட்டு விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது அமெரிக்காவின் பயனுள்ள மூலப்பொருள் கொள்முதல் என்பதால் இனி சீனாவுக்கு பதில் வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது.

உண்மையில் இப்படி ஒரு கனிம புதையலை டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் எதிர்பார்த்தார். அதனால் தான் அவர் உக்ரைனுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை எடுத்து,ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கையும் செய்தார். ஆனால் தற்போது அமெரிக்கா அதே மாதிரியான ஒரு அணுகுமுறையை வங்கதேசத்துடன் மேற்கொள்ளலாம் என சர்வதேசம் கணிக்கிறது.

வருங்காலத்தில் எண்ணெய் அல்லது நிலத்துக்காக யுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தை இயக்கும் கனிமங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதற்காக யுத்தம் வர வாய்ப்பு உள்ளது என்று ஒரு சர்வதேச அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளார். வங்கதேசம் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினால், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார புள்ளிகளில் முக்கிய நாடாக மாற வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வுகளின் படி, உலகளவில் ‘Rare Earth’ உற்பத்தியில் சீனா 70%க்கும் அதிகமான பங்கினை வகிக்கிறது. இந்த நிலையில், வியட்நாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மாற்றுப் புதையல்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளன. தற்போது, அந்த பட்டியலில் வங்கதேசம் சேர வாய்ப்பு உள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட ஆய்வுகளும், வெளிப்படையான ஒழுங்குமுறை சட்டமுறைகளும் இருந்தால் வங்கதேசம் ஒரு வல்லரசு ஆகும்.

வங்கதேச அரசு இதுவரை வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், வல்லுநர்கள் கூறுவதாவது, இந்த ‘Rare Earth’ புதையல்கள் வர்த்தக ரீதியாக சுரங்கத்திற்குத் தகுதியானவையாக இருந்தால், மேற்கு மற்றும் ஆசிய நாடுகள் முதலீட்டு வாய்ப்புகளுடன் விரைவில் வங்கதேசத்தை அணுகக்கூடும்.