ஒரு நிமிடத்திற்கு 693 ராக்கி கயிறுகள் விற்பனை.. ரக்ஷா பந்தன் சாதனை சேல்ஸ்..!

Published:

இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சகோதரிகள் தங்கள் சகோதரருக்கும், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கும் ராக்கி கயிறு கட்டிய நிகழ்வு நடந்தது என்பது தெரிந்தது. அரசியல் பிரபலங்கள் முதல் திரை உலக பிரபலங்கள் வரை பலரும் தங்கள் விருப்பத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ரக்ஷா பந்தன் தினத்தில் ஒரு நிமிடத்திற்கு 693 ராக்கி கயிறுகள் விற்பனையாகி தங்கள் நிறுவனத்தின் விற்பனையில் சாதனை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் இருந்தும் ராக்கி கயிறு ஆர்டர் வந்ததாகவும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் ராக்கி கயிறுகள் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் பெரிய அளவில் இந்த பண்டிகை கொண்டாடப்படவில்லை என்றாலும் வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டது என்பதும் பல பிரமுகர்கள் ராக்கி கயிறு கட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கி கயிறுகள் மட்டுமின்றி தங்கள் சகோதர சகோதரிகளுக்கு பரிசு பொருட்களையும் ரக்ஷா பந்தன் தினத்தில் பரிசளித்தனர் என்றும் இதனால் விற்பனை உச்சத்தை எட்டியதாகவும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் உங்களுக்காக...