ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!

  ரயில்வே துறையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற சூப்பர் ஆப் தயாராகி வருவதாகவும், வரும் டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த ஆப் மூலம் அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் பெறலாம்…

super app

 

ரயில்வே துறையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற சூப்பர் ஆப் தயாராகி வருவதாகவும், வரும் டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த ஆப் மூலம் அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது ரயில் டிக்கெட் எடுக்க மற்றும் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலியை பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் சூப்பர் ஆப் என்னும் செயலியை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பயணிகள் எடுத்துக் கொள்வது, டிக்கெட் ரத்து செய்வது, 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதிகள் இதில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், பிஎன்ஆர் எண் மூலம் டிக்கெட் உறுதியானதா என்பதை சரி பார்த்துக் கொள்ளும் வசதி, ரயில் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வது,  உணவு ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இதில் உள்ளன. அதுமட்டுமின்றி, சரக்கு அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.

தற்போது சரக்கு அனுப்புவதற்கு தனி செயலி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி ஒட்டுமொத்த அனைத்து சேவைகளையும் இந்த சூப்பர் ஆப் என்ற செயலியில் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் இந்த செயலி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.