ரயில் பயணிகளுக்கும் உணவு டெலிவரி செய்யும் ஜொமைட்டோ.. IRCTC உடன் ஒப்பந்தம்..!

  இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ  ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாகவும் இதற்காக IRCTC உடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரயில் பயணிகள் தற்போது…

irctc zomato

 

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ  ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாகவும் இதற்காக IRCTC உடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரயில் பயணிகள் தற்போது ரயிலில் வரும் உணவு அல்லது IRCTC தரும் உணவை சாப்பிட்டு வரும் நிலையில் இனி அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஆர்டரை ஒன்றானஜொமைட்டோ  நிறுவனம் ரயில் பயணிகளுக்கு சரியான நேரத்தில் சரியான ரயில் நிலையத்திற்கு வந்து டெலிவரி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ரயில் பயணிகள் தங்கள் மொபைல் போனில் ஜொமேட்டோ செயலி மூலம் தங்கள் உணவை ஆர்டர் செய்தால் எந்த ஸ்டேஷனில் அந்த உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோ, அந்த ஸ்டேஷனிற்கு வந்து ஜொமேட்டோ ஊழியர்கள் உணவை டெலிவரி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’நீங்கள் இருக்கும் பெட்டிக்கு நேரடியாக வந்து உணவு செய்ய டெலிவரி செய்யப்படும் என்றும் இதுவரை 10 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளோம் என்றும், நீங்கள் பயணம் செய்யும் போது உணவை ஆடர் செய்து பாருங்கள், உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து IRCTC வெளியிட்டுள்ள பதிவில் ரயில் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்த ஒரு சிறப்பு ஏற்பாடு என்றும்,  இந்த ஒப்பந்தம் வழியாக பல விதமான உணவுகள் பயணிகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.