பிரபல இந்திய தொழிலதிபர் ராதிகா குப்தா அவர்களுக்கு 41 கோடி ரூபாய் சொத்து இருந்தும் அவரிடம் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிடில் கிளாஸ் மற்றும் உயர் மிடில் கிளாஸ் மக்கள் கூட ஆடம்பர கார் வாங்குவதற்கு விருப்பப்பட்டு வருகின்றனர் என்பதும் லோன் வாங்கி கூட பலர் ஆடம்பர கார் வாங்கி வருகின்றனர் என்பதும் தெரிந்தது.
ஆனால் பிரபல தொழிலதிபரான ராதிகா குப்தா தன்னிடம் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை என்றும் ஆடம்பர கார் தனக்கு அவசியம் இல்லை என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகா குப்தா 18 வயதில் கல்லூரியில் படிக்கும்போதே அவரிடம் ஒரு ஆடம்பர ஹேண்ட்பேக் கிடையாது என்றும் சாதாரண ஒரு ஹேண்ட் பேக் தான் வைத்திருந்தேன் என்றும் அது குறித்து பலர் விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்கு ஒரு ஆடம்பர கார் தேவை இல்லை என்றும் அவசியமில்லாத ஒன்றை எதற்காக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றும் கார்கள் வாங்குவதால் எந்தவித பயனும் இல்லை என்றும் தேவைக்கு ஒரு கார் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Edelweiss MF என்ற மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வரும் ராதிகா குப்தா தன்னிடம் ஒரு ஆடம்பர கார் கூட இல்லை என்றும் அதற்கு அவர் கூறிய காரணத்தையும் கேட்டு பலர் ஆச்சரியமடைந்துள்ளனர். ஆடம்பர செலவை தவிர்த்தாலே பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை அடையலாம் என்பதற்கு ராதிகா குப்தா ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார் என்று பலர் அவருடைய கருத்துக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.