நேற்று மாலை, நியூயார்க் நகரமே பிரியங்கா சோப்ராவின் வருகையால் களைகட்டியது. அவர் தனது அடுத்த ஹாலிவுட் படமான ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்காக தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில், பிரியங்கா அணிந்து வந்திருந்த வெள்ளை கவுன், பக்கவாட்டில் இருந்த கவர்ச்சியான டிசைனில் அவரது மொத்த இடையழகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகின்றன!
‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ படத் திரையிடலுக்கு பிரியங்கா சோப்ரா வந்து இறங்கியபோது, அவரை படம்பிடிக்க புகைப்பட கலைஞர்கள் கூட்டம் மொய்த்தது. தனது குழுவினருடன் வந்த பிரியங்கா, போட்டோகிராபர்களை பார்த்ததும் கைகூப்பி வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.
இந்தச் சிறப்பு காட்சிக்கு வருவதற்காக பிரியங்கா தேர்ந்தெடுத்த வெள்ளை நிற கவுன், கம்பீரத்தையும் கவர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தியது. Jacquemus பிராண்டின் ‘Peplo Maxi Dress’ என அறியப்படும் இந்த ஆடை, படகு போன்ற கழுத்து , உடற்பகுதியில் மென்மையான மடிப்புகள், மற்றும் தோள்களில் சிறிய அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இடுப்பில் இருந்த இறுக்கமான அமைப்பு அவரது உடலமைப்பை பொலிவுற காட்ட, பக்கவாட்டில் இருந்த இடைவெளி, அவரது இடையழகை கண்கொட்டாமல் பார்க்க வைத்தது. தரையை தொட்டுக்கொண்டே நீண்ட அந்த கவுன், கால்களின் வடிவத்தை பின்பற்றி, ஓரத்தில் ஒரு கவர்ச்சியான வெட்டுடன் முடிந்தது. இந்த ஆடையின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,22,252 என்று ஆடம்பர ஷாப்பிங் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அசத்தலான உடைக்கு ஏற்ப, பிரியங்கா கருப்பு நிற ஸ்ட்ராப் ஹீல்ஸ் மற்றும் சில நகைகளை அணிந்திருந்தார். ஒரு டயமண்ட் டென்னிஸ் பிரேஸ்லெட், அதற்கேற்ற மோதிரங்கள், மற்றும் சிறிய தங்க ஹூப் காதணிகள் அவரது அழகை மேலும் கூட்டின. அவரது முடி ஒரு பக்கமாக பிரிக்கப்பட்டு, மென்மையான அலை அலையான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேக்கப்பை பொறுத்தவரை, பிரியங்கா புருவங்களை மெருகேற்றி, விங் செய்யப்பட்ட ஐலைனர், மஸ்காரா பூசப்பட்ட இமைகள், மற்றும் லேசான ஐ ஷேடோவை தேர்வு செய்திருந்தார். பளபளப்பான பெர்ரி நிற உதடுகள், சிவந்த கன்னங்கள், மற்றும் லேசான ஹைலைட்டர் அவரது ‘ரெட் கார்பெட்’ தோற்றத்தை பிரகாசமாக்கின.
பிரியங்காவின் இந்த இடையழகு உடை நெட்டிசன்களை கவிதை வடிவில் கமெண்ட் எழுத வைத்தது. சிலர் ட்ரோல் செய்யவும் செய்தனர். இந்த உடைக்கு 3 மீட்டர் துணி கூட ஆகியிருக்காது, இதுக்கா ஒரு லட்ச ரூபாய்? போன்ற கிண்டல் பதிவுகளும் இருந்தன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
