ஸ்மார்ட் வாட்ச்சை பார்த்து காப்பியடிக்கும் மாணவர்கள்.. பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published:

எந்த கேள்வி கேட்டாலும் உடனடியாக ஸ்மார்ட் வாட்ச்சை பார்த்து மாணவர்கள் பதில் கூறுவதால் தனியார் பள்ளி நிர்வாகம் ஸ்மார்ட் வாட்ச்சுக்கு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவது தற்போது அதிகமாகி வரும் நிலையில் இது மணி பார்க்க மட்டும் உதவுவது இல்லை என்றும், இதனால் பல்வேறு விதமான பலன்கள் இருக்கிறது என்பதும் தெரிந்தது. குறிப்பாக உடல் நலம் குறித்த தகவல்கள், இன்டர்நெட்டில் தேவையான தகவல்களை இந்த ஸ்மார்ட் வாட்சில் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியர் கேட்கும் கணிதம் உள்பட மற்ற கேள்விகளுக்கு உடனடியாக மாணவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்தாமல் ஸ்மார்ட் வாட்ச் உபயோகம் செய்து பதில் அளிக்க தொடங்கியதால் சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவது தடை விதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைய வாய்ப்பிருப்பதாகவும், அது மட்டுமின்றி பள்ளி வகுப்பு நேரத்தில் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, ஆபாச படங்கள் பார்ப்பது ஆகியவை அதிகரித்து வருவதால் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...