ஜெயிச்சா மட்டும் பத்தாது.. 118 என்ற மேஜிக் நம்பரை எட்டனும், இல்லையெனில் சிக்கல் தான்.. 2026ல் எந்த கட்சிக்கும் மேஜிக் நம்பர் கிடைக்காது போல் தெரிகிறது. 2006 போல் மெஜாரிட்டி இல்லையென்றாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது..!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இதுவரை கண்டிராத ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க…

dmk admk

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இதுவரை கண்டிராத ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற ‘மேஜிக் எண்ணை’ எட்டும் வாய்ப்பு எந்தவொரு பிரதான கட்சிக்கும் இல்லை என்றே தற்போதைய அரசியல் சூழல் சுட்டிக்காட்டுகிறது. எனவே, வெற்றி பெறுவது மட்டும் போதாது, வலிமையான கூட்டணியை அமைப்பது மட்டும் போதாது, கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர ஒரே வழி 118 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக் வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள தொகுதிகள் 234. ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைக்க வேண்டுமானால், 234 இல் பாதிக்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி, ஒரு கட்சிக்கு தேவைப்படும் குறைந்தபட்ச இடங்கள் 118 ஆகும்.

கடந்த காலங்களில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வலிமையைப் பெற்றிருந்தன. ஆனால், மாறிவரும் தேர்தல் கணிதங்கள், பல முனைப் போட்டிகள் மற்றும் புதிய கட்சிகளின் எழுச்சி ஆகியவற்றால், இனிவரும் காலங்களில் எந்த கட்சிக்கும் இந்த 118 என்ற மேஜிக் எண் கிடைப்பது கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது.

தி.மு.க. தலைமையிலான அணிக்கும், அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கும் இடையே மட்டுமே கடுமையான போட்டி இதுவரை நிலவி வந்தது. இதனால் மிக எளிதாக 118 இடங்கள் கிடைத்தது. ஆனால் 2026ல் விஜய் என்ற அரசியல் சக்தி புதிதாக நுழைந்திருப்பதால் எந்த திராவிட கட்சிக்கும் மேஜிக் நம்பர் கிடைக்காது என்றே பலர் கூறுகின்றனர்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. அந்த தேர்தலில், தி.மு.க.வுக்கு வெறும் 96 இடங்களே கிடைத்தன (118 என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை). இருப்பினும், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சியமைத்தது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று எந்த கட்சியும் கேட்கவில்லை.

இதேபோன்ற ஒரு நெருக்கடி நிலை 2026 ஆம் ஆண்டிலும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதாவது, எந்தவொரு பெரிய கூட்டணிக்கும் 118 இடங்கள் கிடைக்காமல் போனால் , 2006 போல் சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். அப்போது அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கலாம்.

சுருக்கமாக சொன்னால், 2026 தமிழ்நாடு தேர்தல், தனிப்பெரும்பான்மைக்கான தேர்தலாக இல்லாமல், கூட்டுச்சக்தி மற்றும் கூட்டணி ஆட்சி என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.