Paytm நிறுவனத்திற்கு NPCI சில மாதங்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து Paytm பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு இணங்க Paytm நிறுவனத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 மாதங்கள் கழித்து மீண்டும் paytm நிறுவனத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, Paytm நிறுவனம் மீண்டும் களத்தில் இறங்கத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், Paytm நிறுவனம் வாடிக்கையாளர்கள் மேலாண்மை, பிராண்டு வழிகாட்டுதல்கள், வங்கி ஆதரவு, மற்றும் வாடிக்கையாளரின் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Paytm நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் களத்தில் ஜிபே மற்றும் போன்பே மட்டுமே இருந்த நிலையில் தற்போது புதிய யுபிஐ பயனர்களை சேர்க்க NPCI ஒப்புதல் வழங்கியதால், Paytm வாடிக்கையாளர்கள் ஏராளமாக மீண்டும் வருவதாகவும், மிக விரைவில் Paytm நிறுவனம் புத்துணர்ச்சி பெறும் என்றும் கூறப்படுகிறது.