இந்திய குடியுரிமையை சரண்டர் செய்த 22000 குஜராத்திகள்.. பாஸ்போர்ட்டும் சரண்டர்.. என்ன காரணம்?

By Bala Siva

Published:

கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத்தை சேர்ந்த சுமார் 22,000 பேர் தங்களுடைய இந்திய குடியுரிமையை சரண்டர் செய்து விட்டதாகவும் அதே போல் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டை சரண்டர் செய்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

குஜராத்தில் உள்ள 30 முதல் 45 வயதை சேர்ந்த சுமார் 22,000 பேர் இந்தியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறி ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். அங்கே குடியுரிமை வாங்கி அவர்கள் செட்டில் ஆகிவிட்டதால் இந்திய குடியுரிமையை அவர்கள் சரண்டர் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு 241 பேர் பாஸ்போர்ட்டுகளை சரண்டர் செய்த நிலையில், 2023 ஆம் ஆண்டு 485 பேர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துவிட்டதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வரை 244 பேர் பாஸ்போர்ட் சரண்டர் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் சுகாதாரம், கட்டமைப்பு, கல்வி, வருமானம் எல்லாமே இந்தியாவை விட அதிக வசதியாக இருப்பதால் பல குஜராத்திகள் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வெளிநாட்டில் செட்டில் ஆகி வருவதாக கூறப்படுகிறது.