இனி ஓடிபி கிடையாது.. டிஜிட்டல் டோக்கன் சிஸ்டம் அறிமுகம்.. வங்கிகள் அதிரடி..!

By Bala Siva

Published:

 

வங்கிகளில் உள்ள பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் அமல்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஓடிபி பாதுகாப்பாக இல்லை என்றும் ஹேக்கர்கள் மிக எளிதாக ஓடிபியை ஹேக் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அடுத்த கட்டமாக யோசித்த வங்கி நிர்வாகம் தற்போது ஓடிபிக்கு பதிலாக டிஜிட்டல் டோக்கன் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பிரபல வங்கிகள் இந்த டிஜிட்டல் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருப்பதாகவும் இனி வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்யும்போது ஓடிபிக்கு பதிலாக இந்த டிஜிட்டல் டோக்கனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் டோக்கன் என்பது வங்கியில் உள்ள மொபைல் செயலியில் மட்டுமே தோன்றும் வகையில் இருக்கும் என்பதால் அதை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஓடிபியை விட இது பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது.

வங்கியில் இருந்து மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி மிக எளிதாக ஹேக்கர்கள் ஹேக் செய்து வங்கியில் உள்ள பணத்தை முறைகேடு செய்து வரும் நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக தான் சிங்கப்பூரில் இந்த டிஜிட்டல் டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த டிஜிட்டல் டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.