சோத்துக்கே வழியில்லை, நீயெல்லாம் சமாதான தூதுவரா? முன்னாடி வந்து ‘சமாதானம்’னு கை குடுப்பாய்… பின்னாடி போய் ‘சதி’ பண்ண கத்தி எடுப்பாய்! இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல… ரத்தத்துல ஊறுன துரோகம்! பாகிஸ்தானை பயன்படுத்த நினைக்கும் டிரம்ப்.. ஆனால் பாகிஸ்தானை நம்பாத ஈரான்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் தூதரக முயற்சிகள் வெறும் வெளிவேஷம் என்றும், இதற்கு பின்னால் அமெரிக்காவின் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இஸ்லாமாபாத்தில்…

pakistan iran

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் தூதரக முயற்சிகள் வெறும் வெளிவேஷம் என்றும், இதற்கு பின்னால் அமெரிக்காவின் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இஸ்லாமாபாத்தில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து பாகிஸ்தான் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த தான் முயற்சிப்பதாக பாகிஸ்தான் கூறினாலும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அமெரிக்காவோ அல்லது பாதிக்கப்பட்ட ஈரானோ இல்லாத ஒரு கூட்டத்தை பாகிஸ்தான் நடத்துவது என்பது உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த திடீர் அமைதி தூதுவர் அவதாரம் என்பது அதன் சொந்த விருப்பம் அல்ல, மாறாக அமெரிக்காவின் ‘இஸ்லாமிய கார்டு’ விளையாட்டின் ஒரு பகுதி என பார்க்கப்படுகிறது. ஈரானை தனிமைப்படுத்தவும், அந்நாட்டின் பாதுகாப்பு அரண்களை உள்ளிருந்து உடைக்கவும் அமெரிக்காவிற்கு ஒரு முஸ்லிம் நாடு தேவைப்படுகிறது. அந்த இடத்தை பாகிஸ்தான் கச்சிதமாக பிடித்துள்ளது. ஒருபுறம் ஈரானிடம் “நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்” என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அமெரிக்காவிற்கு சாதகமாக ஈரானின் முதுகில் குத்தும் வேலையை பாகிஸ்தான் செய்கிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் அல்லது அந்நாட்டின் ராணுவ பலம் முற்றிலும் முடக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் இலக்கு. ஈரானை பலவீனப்படுத்த பாகிஸ்தானை ஒரு கருவியாக பயன்படுத்தி, ஈரானின் கோட்டை கதவுகளை உள்ளிருந்து திறக்க அமெரிக்கா முயல்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், ஐஎம்எஃப் நிதியுதவிக்காக அமெரிக்காவின் எந்த கட்டளைக்கும் அடிபணிய காத்திருக்கிறது.

ஈரானை பொறுத்தவரை இந்த போரில் பின்வாங்குவது என்பது தற்கொலைக்கு சமம். அமெரிக்கா தனது நிலப்பரப்பில் தரைவழி தாக்குதலை தொடங்கினால், அது அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளை எண்ண முடியாத அளவிற்கு பெருக செய்யும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஈரானின் ‘கார்க் தீவு’ பகுதியை ஆக்கிரமிக்க அல்லது அழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வரும் தகவல்கள் போரின் தீவிரத்தை உணர்த்துகின்றன. ஈரானின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. இது ஒரு தூதரக முயற்சி என்பதை விட, ஈரானை சுற்றியுள்ள நட்பு நாடுகளை ஈரானுக்கு எதிராக திருப்பும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கின் தற்போதைய சூழலில் சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளன. சவூதி அரேபியாவிடம் பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. அதே சமயம் அமெரிக்காவின் ஆதரவும் அதற்கு தேவை. இந்த போர் ஒரு ‘டெர்மினல் ஃபேஸ்’ எனப்படும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை நிலைநாட்ட ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். அந்த வெற்றி ஈரானின் வீழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இதில் பாகிஸ்தான் வகிக்கும் பாத்திரம் மிகவும் ஆபத்தானது; அது ஈரானை அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றி அமெரிக்காவின் பிடியில் தள்ளிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

இறுதியாக, பாகிஸ்தான் காட்டும் இந்த தூதரக வேகம் வெறும் பணத்திற்காகவும், உலக அரங்கில் தங்களை ஒரு வல்லரசாக காட்டி கொள்வதற்காகவுமே தவிர, இதில் துளிக்கூட உண்மை இல்லை. ஈரானின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி இப்போதும் நீடிக்கிறது. ஒருபுறம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானை துவம்சம் செய்து கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் அமைதி பேச வருவது வேடிக்கையாக உள்ளது. வரும் நாட்களில் டொனால்ட் டிரம்ப் தனது ராணுவத்திற்கு எப்போது கட்டளையிடுவார் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த தருணத்தில் பாகிஸ்தானின் உண்மையான முகம் ஈரானுக்கு தெரியவரும், ஆனால் அப்போது காலம் கடந்திருக்கக்கூடும்