பாகிஸ்தானை தாக்க இந்தியா தீவிரவாதிகளை ஏவி விடுதாம்.. காமெடி செய்யும் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. நேரடியாக தாக்கும்.. இது காங்கிரஸ் கால இந்தியா அல்ல, சமாதானம் பேச.. பதிலடி தான் ஒரே வழி.. இது மோடியின் இந்தியா..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி11 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும், 36 பேர் காயமடைந்தும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தலைமை…

pakistan2

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி11 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும், 36 பேர் காயமடைந்தும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தலைமை வழக்கம் போல் இந்தியா மீது பழிபோட முயன்றது. இது ஆதாரமற்றது” என்று புதுடெல்லி கடுமையாக மறுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப், இந்த தாக்குதலுக்கு பின்னால் இந்தியாவின் ஆதரவுடன் செயல்படும் குழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதை ஒருபடி மேலே சென்று, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இது ஆப்கானிஸ்தான் வழியாக வழிநடத்தப்படும் இந்திய ஆக்கிரமிப்பு என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கோ நியூஸ் உடனான நேர்காணலில் பேசியபோது, “ஆப்கானிஸ்தான் பக்கத்திலிருந்து ஒரு தாக்குதல் வரவிருக்கும் அச்சுறுத்தலின் முன்னோடியாகவே இந்த இரண்டு சம்பவங்களும் எனக்கு தெரிகிறது. இது உண்மையில் ஆப்கானிஸ்தான் வழியாக நம் நாட்டில் தொடுக்கப்படும் இந்திய ஆக்கிரமிப்பாகவே இருக்கும். அண்டை நாட்டின் பகைமை வெளிப்படையாக வந்துள்ளது என்பதில் எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது,” என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் தலைமையின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா உடனடியாக கடும் பதிலடி கொடுத்தது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்தது. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜைஸ்வால்: “அப்பட்டமாக வெறித்தனமாக இருக்கும் பாகிஸ்தான் தலைமையால் முன்வைக்கப்படும் அடிப்படையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜைஸ்வால் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானின் பொதுமக்களின் கவனத்தை தங்கள் நாட்டில் நிகழ்ந்து வரும் ராணுவம் சார்ந்த அரசியலமைப்பு சீர்குலைவு மற்றும் அதிகார கைப்பற்றலில் இருந்து திசை திருப்புவதற்காக, இந்தியாவுக்கு எதிராக பொய்யான கதைகளை உருவாக்குவதே பாகிஸ்தானின் தந்திரமாகும்,” என்றார்.

பாகிஸ்தானின் “தடுமாறும் திசைதிருப்பல் சூழ்ச்சியால்” சர்வதேச சமூகம் தவறாக வழிநடத்தப்படாது என்றும், நிலைமையின் உண்மை தன்மையை அவர்கள் அறிவார்கள் என்றும் ஜைஸ்வால் மேலும் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு ஃபினாத் அல்-கவாரிட்ஜ் என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் உதவியதாகவும், மேலும் பல தாக்குதல்கள் வரக்கூடும் என்றும் அந்த குழு எச்சரித்தது.

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “ஆப்கான் தாலிபான் பாகிஸ்தானின் அனுதாபிகளாகவோ அல்லது அமைதியை விரும்புவதில் நேர்மையுடனோ இருக்கிறார்கள் என்ற மாயை இனி இருக்க கூடாது. ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத புகலிடங்கள் மீதான தாக்குதல்களை நிராகரிக்க முடியாது,” என்று கடுமையாக எச்சரித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி, “ஆப்கானிஸ்தானில் மக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தாக்குதல்களுக்கு அனுப்பப்படுவது குறித்து நாங்கள் சான்றுகளை அளித்துள்ளோம். ஆப்கானிஸ்தான் இந்த தீவிரவாத சக்திகளை கட்டுப்படுத்தத் தவறினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம்,” என்று ஆப்கானிஸ்தானுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்தார்.