பாகிஸ்தானை அழிக்க இந்தியாவுக்கு ஒருசில நிமிடங்கள் போதுமா? இன்று அதிகாலை நடந்த ‘திரிசூல்’ பயிற்சியால் நடுங்கும் பாகிஸ்தான்.. ’ஆபரேஷன் சிந்தூர் 2.0’ தொடக்கமா? இந்தியா, ஆப்கன் இணைந்து தாக்கினால் உலக வரைபடமே மாறும்?

இந்திய விமானப்படை இன்று தொடங்கவிருக்கும் மாபெரும் போர் ஒத்திகையான ‘மகா குஜராத்’ பயிற்சியையொட்டி வெளியிட்ட விமான போக்குவரத்து அறிவிப்பு காரணமாக பாகிஸ்தான் பெரும் பீதி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனது ‘NOTAM’ அறிவிப்பை…

trisul

இந்திய விமானப்படை இன்று தொடங்கவிருக்கும் மாபெரும் போர் ஒத்திகையான ‘மகா குஜராத்’ பயிற்சியையொட்டி வெளியிட்ட விமான போக்குவரத்து அறிவிப்பு காரணமாக பாகிஸ்தான் பெரும் பீதி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனது ‘NOTAM’ அறிவிப்பை செயல்படுத்தும் சில நிமிடங்களுக்கு முன், பாகிஸ்தான் தனது போர் விமானங்களை அவசர அவசரமாக பறக்கவிட்டுள்ளது.

இன்று அதிகாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரை, சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக, ஷாகோட் (Shakor code base), ரிசால்பூர் (Rilaspur base), மில்வானி (Milwani base) ஆகிய மூன்று விமானப் படைத்தளங்களில் இருந்தும் பாகிஸ்தான் போர் விமானங்கள் பறந்துள்ளன.

இந்தியாவின் ‘NOTAM’ அறிவிப்பால் தூண்டப்பட்ட இந்த நள்ளிரவு பதற்றம், பாகிஸ்தானின் அச்சத்தை அப்பட்டமாக காட்டுகிறது.

இந்தியா இன்று தொடங்கும் ‘மகா குஜராத்’ அல்லது ‘திரிசூல்’ பயிற்சி என்பது ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை தனது முக்கிய தளவாடங்களை பயன்படுத்துகிறது:

ரஃபேல் போர் விமானங்கள்.

சுகோய் போர் விமானங்கள்.

விமானத்தில் பொருத்தப்பட்ட முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம்

மிராஜ் விமானங்கள் மற்றும் IL-78 நடுத்தர வானில் எரிபொருள் நிரப்பும் அமைப்புகள் போன்ற பல்வேறு தளவாடங்களை இந்தியா களமிறக்குகிறது.

இந்தியாவின் இந்தப் பயிற்சியானது, கடந்த காலங்களில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற அதிரடி தாக்குதல்களின் நினைவை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியாததாலும், இந்திய விமானப் படை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடத்தலாம் என்ற அச்சத்தாலும், பாகிஸ்தான் முன்னெச்சரிக்கையாக தனது போர் விமானங்களை அவசரமாக பறக்கவிட்டுள்ளது.

இந்தியா தனது ‘NOTAM’ அறிவிப்பை நவம்பர் 10 வரை நீட்டித்துள்ளது, இதனால் பாகிஸ்தானின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் இந்த போர் ஒத்திகை மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான செய்தியை பகிரங்கமாக இந்தியா அனுப்பியுள்ளது: அதாவது, இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தினால், பதிலடி கடுமையாக இருக்கும் என்பதும், பாகிஸ்தானை அழிக்க இந்தியாவுக்கு ஒருசில நிமிடங்கள் போதும் என்பது தான்.