ஒரு காலத்தில் திருமணம் என்பதே மிகப்பெரிய ஒரு செலவான விஷயமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இந்த திருமணத்திலேயே நிறைய பிரம்மாண்டமான விஷயங்களையும் பலர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு திருமணத்திற்காக பல நாட்கள் பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்வது என திட்டம் போட்டு சிக்கனமாக நடத்தவும் பலர் முயன்றுள்ளனர்.
ஆனால் தற்போது இவை அனைத்தையும் தாண்டி திருமணம் என்றாலே பிரம்மாண்டம் என்ற ஒரு சூழலும் உருவாகிவிட்டது. இரண்டு பேர் திருமணம் செய்து கொள்ள போவதற்காக அவர்களின் குடும்பத்தினரை அழைத்து அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று அதையெல்லாம் தாண்டி ஏதாவது புதுமையாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றும் பலரும் அதற்கான முயற்சிகளில் இறங்கி வருகிறார்கள்.
விதவிதமான வகையில் மணமக்கள் மேடைக்கு வர வேண்டும் என நினைப்பது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடங்கி அதிகம் செலவு செய்து என பல திருமணங்களில் அரங்கேறி வருவதை நாம் கவனித்து வருகிறோம். அப்படி ஒரு சூழலில் பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஹைதராபாத் பகுதியில் சமீபத்தில் நடந்த திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று உலக அளவில் ஒரு பக்கம் வியப்பையும், இன்னொரு புறம் விமர்சனத்தையும் உண்டு பண்ணி வைத்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த வீடியோ ஒன்றில் ஒரு பெரிய வீட்டை சுற்றி விமானம் ஒன்று பறந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து ஏதோ கீழே விழுவது போலவும் தெரியும் நிலையில் இது என்ன, எதற்காக இது நடந்தது என்பது பற்றியும் சில தகவல்களும் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் ஹைதராபாத் பகுதியில் பெண்ணின் வீட்டை சுற்றி ஒரு விமானம் மேலே பறந்ததுடன் மட்டுமில்லாமல், அதிலிருந்து லட்சக்கணக்கில் பணமும் கீழே பறந்து விழுவது தெரிகிறது.
பெண்ணின் வீட்டார், மாப்பிள்ளையின் தந்தையிடம் திருமண நாளில் பெண்ணின் வீட்டை சுற்றி விமானத்தில் பணம் பறக்க வேண்டும் என்று இது தொடர்பாக கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்த மாப்பிள்ளையின் தந்தை அதிலிருந்து லட்சக்கணக்கில் ரூபாய் பறப்பதற்கும் வழி செய்துள்ளார்.
இப்படி தேவையில்லாமல் பிரம்மாண்டம் என்ற பெயரில் பணத்தை பறக்க விடுவதற்கு பதிலாக இயலாதவர்களுக்காக அதை கொடுத்திருந்தாலே நிச்சயம் பெரிய பெயர் உதவியாக இருந்திருக்கும் என்றும் பணத்தை எப்படியெல்லாம் வீணாக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த வழி இதுதான் என கொந்தளிப்பில் விமர்சனங்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
دلہن کے ابو کی فرماٸش۔۔۔😛
دولہے کے باپ نے بیٹے کی شادی پر کراٸے کا جہاز لےکر دلہن کے گھر کے اوپر سے کروڑوں روپے نچھاور کر دیٸےاب لگتا ہے دُولھا ساری زندگی باپ کا قرضہ ہی اتارتا رہیگا pic.twitter.com/9PqKUNhv6F
— 𝔸𝕞𝕒𝕝𝕢𝕒 (@amalqa_) December 24, 2024