இந்தியாகிட்ட அசிங்கப்படுவதே பாகிஸ்தான் வேலையா போச்சு.. மற்றொரு மெகா தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. படித்த இளைஞர்களை தீவிரவாதிகள் ஆக்கும் பாகிஸ்தான்.. சாப்பிட சோறு இல்லாத பஞ்ச பரதேச நாட்டிற்கு தீவிரவாதம் எல்லாம் தேவையா? போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கப்பா..!

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அருகே ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடந்த அதிரடி சோதனையில், சுமார் 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது நாடு முழுவதும்…

india vs pakistan

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அருகே ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடந்த அதிரடி சோதனையில், சுமார் 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 250 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட புல்வாமா தாக்குதலை விட பல மடங்கு பெரிய நாசவேலைக்கு திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒரு டாக்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒரு பெண் மருத்துவர் மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானுடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைதான பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அல்லது முக்கிய மையங்களை தாக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 2,900 கிலோ வெடிபொருட்கள், ஒற்றை இடத்தில் மட்டுமின்றி, பல இடங்களில் பெரிய அளவிலான தொடர் தாக்குதல்களை நடத்த போதுமானது.

ஃபரிதாபாத் மட்டுமின்றி, குஜராத்தின் அகமதாபாத்தில் சீனாவில் படித்த ஒரு டாக்டர் உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், உத்திரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் அல்-கொய்தா தொடர்புடன் தாக்குதல் சதி செய்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சதித்திட்டங்களின் மையப்புள்ளி ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு செல்வதாகவும், அங்குள்ள ஐஎஸ்ஐ முகவர்கள் சதித்திட்டத்தை ஒருங்கிணைக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சதித்திட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் படித்த தொழில் வல்லுநர்கள் ஈடுபட்டிருப்பது, பாகிஸ்தான் படித்த இளைஞர்களை பயன்படுத்தித் தாக்குதல்களுக்கு திட்டமிடும் புதிய முறையை காட்டுகிறது.

இந்தியாவில் படித்த இளைஞர்கள் நல்ல வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் படித்த இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு உதவி செய்யும் அவல நிலை அந்த இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

இந்தியாவை தாக்குவதற்காக தீட்டப்படும் திட்டங்களுக்காக செலவழிக்கும் மூளையை தன் சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக இளைஞர்களை வழி நடத்தினால் பாகிஸ்தான் இந்நேரம் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும் என்றும் ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதம் செல்வதையே செய்வதையே முழு நேர தொழிலாக வைத்திருப்பதால் தான் அந்த நாடு பசி, பட்டினி என பஞ்ச பரதேசி நாடாக இருக்கிறது என்றும் சர்வதேச அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனிமேலாவது தீவிரவாதத்தை மூட்டை கட்டி விட்டு பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க, படித்த இளைஞர்களை நல்ல வேலைக்கு அனுப்புங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானின் முட்டாள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இதெல்லாம் செல்லுமா என்பது கேள்விக்குறியே.